கொரோனா இல்லை என சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் – தமிழக முதல்வர்

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசி வருகிறது. அதன் வேகத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா விதிமுறைகள் கடுமையாக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் எனக் கூறியுள்ளார். மேலும், நாளை நடைபெறும் ஆலோசனைக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து தெரிவிக்கப்படும் எனவும் கூறினார்.

தமிழகம் கேட்ட அளவிற்கு மத்திய அரசு இன்னும் கொரானா தடுப்பூசிகளை வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *