ராஜீவ் காந்தி படத்துக்கு முதல்வர் மலர்தூவி மரியாதை!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30 ஆவது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராஜீவ் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரேந்திர சிங் ஆகியோரும் ராஜீவ் காந்தி நினைவுநாளையொட்டி மரியாதை செய்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று, திருச்சி செல்லும் போது, ரயில் நிலையம் அருகில் உள்ள முன்னாள் முதல்வர் ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.