மதுரை தோப்பூரில் முதலமைச்சர் ஆய்வு!

தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி, இன்று மதுரையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் கலந்தோசித்தார்.
மேலும், கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், அனைத்து மாவட்டங்களிலும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கையை அதிகரிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று மதுரை தோப்பூரில் , ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து ஆய்வு செய்தார்.