அரசு இல்லத்தை காலி செய்ய மறுக்கும் எடப்பாடி!

தமிழகத்தில், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்கிளில் வெற்றில் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனால், புதியாக பதிவியேற்றுக் கொண்டுள்ள அமைச்சர்கள், சபாநாயகர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, முன்னாள் துணை முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வம் வசித்த இல்லம் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், முன்னாள் சபாநாயகர் தனபால் வசித்த இல்லம், தற்போதைய சபாநாயகர் அப்பாவு-விற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளை காலி செய்ததும் புதுப்பிக்கப்பட்டு தற்போதைய அமைச்சர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், தற்போது, எதிர்கட்சித் தலைவராக இருக்கும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தான் வசித்த அதே வீட்டை தனக்கு ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், அவருக்கு அதே வீடு ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.