கொரோனா பரிசோதனைக்கு அதிக கட்டணமா? புகாரளிக்க இலவச தொலைபேசி எண்

தமிழ்நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால், தனியார் கொரோனா பரிசோதனை மையங்களுக்கான புதிய கட்டணத்தை தமிழக அரசு நேற்று (20.5.2021) அறிவித்தது.

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் 800 ரூபாயில் இருந்து 550 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகளாக இல்லாதவர்கள் தனியார் பரிசோதனை மையங்களில் ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் 1,200 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இதை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் பரிசோதனை மையங்களின் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்திருந்தது. மேலும், இது குறித்து புகாரளிக்க இலவச தொலைபேசி எண்ணும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆய்வகங்கள் குறித்து 1800 4243 993 என்ற கட்டணமில்லா எண்ணிலோ அல்லது 104 என்ற கட்டணமில்லா எண்ணிலோ, பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும், அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…