ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்….தமிழக அரசு அறிவிப்பு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட வழக்குகள் தவிர மற்ற வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நபர்களுக்கு உயர்கல்வி, வேலை வாய்ப்பிற்காக தடையில்லா சான்று வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், போலீசாரால் கைது செய்யப்பட்டு காயங்கள் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளான 93 பேருக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.