டாக்ஸி ஆம்புலன்ஸ் – மத்திய அரசு பாராட்டு

கொரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் தினசரி பாதிப்பின் வேகம் கவலை அளிப்பதாக உள்ளது.

கொரோனா நோயாளிகளை மருத்துமனைகளுக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இன்றியமையாததாக இருக்கிறது. அரசின் ஆம்புலன்ஸ் வசதி அனைவரும் கிடைப்பதில்லை. அதனால், மக்கள் தனியார் ஆம்புலன்ஸ்களை பயன்படுத்துக் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் ஆம்புலன்ஸ்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்திருந்தனர். இதனால், மக்களின் கவலையைப் போக்க தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான புதிய கட்டணைத்தை அறிவித்து அரசாணை வெளியிட்டது.

ஆனாலும், தொற்றால் ஏற்படும் பாதிப்பு அதிகளவில் உள்ளதால் ஆம்புலன்ஸ் வாகனங்களின் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு சென்னையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, சென்னையில் 250 கால் டாக்சிகள் ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டது.

முதல்கட்டமாக 50 டாக்சிகள் ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டன. இந்த வகை ஆம்புலன்ஸ்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களை சிகிச்சை மையங்களுக்கு அழைத்து செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் சிறப்பான செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழ்நாட்டின் டாக்ஸி சேவையை பாராட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Drupathi

“உலகமே இந்தியாவை எதிர்நோக்கியுள்ளது” – குடியரசுத் தலைவர் உரை!

குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்றத்தில்…

துரோகம் என்பது அவர்களது மரபணுவில் உள்ளது எடப்பாடி அணியை வச்சு செய்த பி.வி.கே.பிரபு

துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் துரோகம் என்பது அவர்களது மரபணுவிலே…

போக்குவரத்து பெண் தலைமை காவலரை கன்னத்தில் அறைந்த அதிமுக வழக்கறிஞர் அராஜகம்…!

சிவகாசியில் போக்குவரத்து பெண் தலைமை காவலரை கன்னத்தில் அறைந்த அதிமுக வழக்கறிஞர் கைது!சிவகாசி…

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளே இல்லை… தேவையும் இல்லை… சுப. வீரபாண்டியன் நறுக்

தமிழ்நாட்டில் மக்களை மதத்தால் பிரிக்கும் சூழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மீஞ்சூரில் திருவள்ளுவர் சிலை…