2 ஆவது முறையாக முதல்வராக பதவியேற்ற பினராயி விஜயன்!
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
திருவனந்தபுரத்திலுள்ள விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் கேரளாவின் முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 20 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் ஆளுநர் ஆரிப் முகமது பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இரண்டாவது முறை முதலமைச்சர் பதவியேற்றுள்ள பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.