தமிழகத்தில் கரும் பூஞ்சை நோயின் முதல் உயிர் பலி!

இந்தியா கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், அதற்குள் புதிய நோய் ஒன்று கிளம்பியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பாதித்து குணமடைந்தவர்களை கரும்பூஞ்சை என்னும் நோய் தாக்கி வருகிறது. கர்நாடகா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் மரணமடைபவர்களின் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கரும்பூஞ்சை நோயின் காரணமாக தமிழகத்தில் முதல் உயிர்பலி ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த 57 வயதான வெல்டிங் பட்டறை உரிமையாளர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, கரும்பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த 17ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனில்லாமல் இன்று (மே 20) உயிரிழந்துள்ளார்.

சர்க்கரை நோய் உள்ளவர்களை இந்த கரும்பூஞ்சை நோய் அதிகளவில் தாக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், சென்னை எழும்பூர் அரசு மருத்துமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 சர்க்கரை நோயாளிகள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *