பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு முதல்வர் கடிதம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலேயே தன் வாழ்நாளை கழிக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேருக்கு விடுதலை அளிக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில் கொரோனா காலகட்டமான இந்த இக்கட்டான சூழலில் 7 பேரின் விடுதலை கோரிக்கையை குடியரசு தலைவர் பரிசீலிக்க வேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தை குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலகத்தில் நேரில் அளித்தார் டி.ஆர் பாலு.