சென்னையில் மழை!

கடந்த சில வாரங்களாக கோடை வெயில் தமிழகத்தை வாட்டி எடுத்து வந்தது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெப்பம் சதம் அடித்தது. இந்நிலையில் இன்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், அம்பத்தூர், ஆவடி, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.