விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

நடிகரும், தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அதிகாலையில் 3 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு தேமுதிக கட்சியைத்தொடங்கிய விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்று திரும்பிய அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வருகிறார்.

அண்மையில், கொரோனா பாதிப்பும் ஏற்பட்டு அவர் குணமடைந்துள்ளார். இந்நிலையில், நேற்று(18.5.2021) அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *