ஊரடங்கு விதிகளை மதிக்காத மக்கள்!
தமிழகத்தில், கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தி மக்களைக் காப்பாற்ற அரசு பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கொரோனா பரவல் சங்கிலியை உடைப்பதற்கு ஒரே வழி ஊரடங்கு தான் என்பதால், தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களில் பலர் அதன்பின்பும் வெளியில் சுற்றி வந்ததால் தொற்று பரவும் வாய்ப்பு அதிகரித்தது.
அதனால், அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகளுக்கு காலை 6 மணி முதல் 10 வரை மட்டுமே செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக தொற்று பாதிப்பு சிறிதளவு குறைந்து வருகிறது.
ஆனால், மக்கள் சிலர் அரசு அறிவித்துள்ல ஊரடங்கு விதிகளை முறையாக கடைபிடிக்காமல் செயல்பட்டு வருகின்றனர். சென்னை புளியந்தோப்பு, நாராயணசாமி சாலையில் உள்ள ஒரு கடையில், அத்தியாவசிய பொருட்களான பால், பிஸ்கட் போன்றவை விற்பதாக கூறிக்கொண்டு, சிகரெட் போன்ற மற்ற பொருட்களையும் விற்று வருகின்றனர்.
மேலும், அனுமதித்த நேரத்தைத் விட கூடுதலாக இரவு வரை சிகரெட் விற்பனை சூடுபிடித்து வருகிறது. சிகரெட்டை வாங்குபவர்களும் சமூக இடைவெளி பற்றி கவலை இல்லாமல் அங்கேயே நின்று புகைத்து வருகின்றனர். இதுதொடர்பாக, வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.