முதல்வருக்கு எதிர்கட்சித் தலைவர் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாக்க தமிழக அரசு பல பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் மே 24 ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல தொழிலாளர்கள் தங்களது வேலையை இழந்து வாடி வருகின்றனர். அவர்களின் கவலையைப் போக்க, கொரோனா நிவாரண நிதியில் இருந்து முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் இம்மாதமே வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து, அதனை செயல்படுத்தியும் உள்ளார்.
இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி, “அனைத்து தொழிலார்களுக்கும் கொரோனா நிவாராண உதவித் தொகை வழங்க வேண்டும்” என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.