வதந்திகளை நம்ப வேண்டாம்! தேமுதிக விளக்கம்
தேமுதிகவின் பொதுச்செயளாளர் விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக அதிகாலை 3 மணிக்கு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால், அவரது உடல் குறித்து பல்வேறு கருத்துகள் வெளிவந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், விஜயகாந்தின் உடல் நிலை குறித்து தேமுதிக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, கேப்டனின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சிகிச்சை முடிந்து கேப்டன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என. கூறப்பட்டுள்ளது.