திருமண விழா இ-பதிவுக்கு மேலும் ஒரு புதிய விதிமுறை!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு இ-பதிவு கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.
இந்த இ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு முதலில் சேர்க்கப்படவில்லை. பின்னர் திருமணத்திற்கு செல்பவர்களுக்கும் இ-பதிவு அனுமதிக்கலாம் என அரசு தெரிவித்தது.
ஆனால், திருமண விழாக்களில் விருந்தினர்களுக்கு உணவு அளிப்பதற்கு அரசு தடை விதித்தது.
இந்நிலையில் இந்த திருமண இ-பதிவு முறையில் மேலும் ஒரு புதிய விதிமுறையை அரசு சேர்த்துள்ளது.
அதன்படி, திருமண விழாவில் பங்கேற்பவர்கள் அத்தனை பேரின் வாகன எண்களும் ஒரே இ-பதிவில் குறிப்பிட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து வாகனங்களின் எண்கள், ஓட்டுநர் பெயர், கைபேசி எண், பயணிப்போரின் பெயர், ஒரு அடையாள ஆவணம் அவசியம் எனவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மணமகன், மணமகள், தாய், தந்தை என இவர்களில் ஒருவர் மட்டுமே இ-பதிவை மேற்கொள்ளவேண்டுமெனவும், விண்ணப்பதாரரின் பெயர் இ-பதிவில் கட்டாயம் இடம்பெற வேண்டுமெனவும் கூறியிருக்கிறது. மேலும் திருமண அழைப்பிதழை கட்டாயம் பதிவேற்றம் செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.