‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ மறைவு!

கி.ரா என அழைக்கப்படும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் வயது மூப்பு காரணமாக நேற்று(17.5.2021) இரவு புதுச்சேரியில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வய்து 98.
7 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த அவர் இளமைக்காலத்தில் விவசாயியாக தனது வாழ்க்கையைத் தொடர்ந்திருந்தார். 40 வயதுக்குப் பிறகே அவரின் எழுத்துப் பயணம் தொடங்கியது. அப்போது, தொடங்கிய பயணம் இறக்கும் வரை தொடர்ந்திருக்கிறது.
’கரிசல் இலக்கியத்தின் தந்தை’ என போற்றப்படும் கி.ரா, தான் எழுதிய ’கோபல்லபுரத்து கிராமம்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.