முழு அரசு மரியாதையுடன் கி. ரா இறுதி அஞ்சலி!
கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் எழுத்தாளர் கி.ரா எனப்படும் கி.ராஜநாராயணன், வயது மூப்பு காரணமாக புதுச்சேரியில் உள்ள இல்லத்தில் காலமானார்.
இவருக்குப் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என கூறப்பட்டிருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் கி.ராவுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், “கரிசல் குயில்’ கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்! கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்! அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். குடும்பத்தினர் – வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!” என பதிவிட்டுள்ளார்.