மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடப்படும் – சுகாதாரத்துறை அமைச்சர்

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக வீசி வருகிறது. இதனையடுத்து அரசு தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

தடுப்பூசி செலுத்துவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் எனவும், போலி மருந்து விற்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *