சென்னைக்குள் பயணிக்க இ-பதிவு கட்டாயம்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 24 ஆம் தேதி வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் தேவையில்லாத பயணங்களைத் தவிர்ப்பதற்காக மே 17 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையே பயணம் செய்ய இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று(18.5.2021) முதல் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிக்குள் பயணம் செய்ய வேண்டும் என்றாலும் இ-பதிவு முறை கட்டாயம் என காவல் துறை தெரிவித்துள்ளது. இ-பதிவுக்காக கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் சென்று பதிவிட்டு, மாவட்டத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பயணிக்கலாம் எனவும், இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் காவல் துறை எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *