புதிய அட்டைதாரர்களுக்கும் 2000 ரூபாய்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.
திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல, முதல்வராக பொறுப்பேற்றதும் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், கொரோனாவிற்கான நிவாரணம் 4000 ரூபாயில் இருந்து முதல் தவணையாக 2000 ரூபாய் மே மாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அனைத்து ரேஷன் அரிசி அட்டைத் தாரர்களுக்கும் மே 15 ஆம் தேதி முதல் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ”கடந்த 3 மாதங்களில் 2,14,950 பேர் புதிதாக ரேஷன் அரிசி அட்டைக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி முதல் தவணையான 2000 ரூபாய் இம்மாதமே வழங்கப்படும்” என, முதல்வர் தெரிவித்துள்ளார்.