கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் – டெல்லி முதல்வர்
நாட்டில் கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வருகின்றன. தலைநகர் டெல்லியிலும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வீட்டில் வருமானம் ஈட்டுபவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அந்தக் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.2500 நிவாரணமாக அளிக்கப்படும் எனவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.