இன்று கரையை கடக்கிறது டவ்-தே புயல்!

அரபிக்கடலில் லட்சத்தீவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை அதிதீவிர புயலாக வலுபெற்றுள்ளது. இந்த புயலுக்கு டவ்-தே என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், டவ்-தே புயல் இன்று குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 185 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு 10 மணிக்கு மேல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. புயலால் சேதம் அதிகமாக இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும். மீட்புப்படையினரும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.