ரெம்டெசிவர் மருந்து விற்பனை நிறுத்தம்!
கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவர் மருந்து சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், சென்னை மட்டுமல்லாமல் திருச்சி, கோவை, நெல்லை, மதுரை, சேலம் ஆகிய மாநிலங்கிளிலும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், மருந்துகளை வாங்க மக்கள் அதிகமாக கூடுவதால் கொரோனா பாதிப்பு வேகமெடுக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு அனைத்து இடங்களிலும் ரெம்டெசிவர் மருந்து விற்பனையை அரசு நிறுத்தியுள்ளது.
இதனால், மருத்து தேவைப்படுபவர்கள் தனியார் மருத்துவமனைகளை அணுகலாம் என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.