பெரியார் மருத்துவ குழுமம் சார்பில் ’அலைபேசி மருத்துவ சேவை’
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் கட்டுப்படுத்தி மக்களைக் காப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வரிசையில், பெரியார் மருத்துவ குழுமம் இன்று முதல் அலைபேசி மருத்துவ சேவையைத் தொடங்க உள்ளது. இது தொடர்பாக செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், “தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் கொரோனா பெருந்தொற்றை ஒழிக்க ’மக்கள் இயக்கமாக’ மாற வேண்டும் என்ற அறிவுறுத்தலை ஏற்று, இன்று முதல் பெரியார் மருத்துவ குழுமத்தின் சார்பில் அலைபேசி மருத்துவ சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.
இதன்மூலம், கொரோனா மட்டுமன்றி அனைத்து நோய்களையும் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.