மிரட்டும் டவ் தே புயல்…மும்பையில் கனமழை!


அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று புயல் கரையை கடக்க உள்ளதால் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதுவரை புயலுக்கு 6 பேர் பலியாகியுள்ளனர். 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 2542 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *