கம்யூனிஸ்ட் கட்சி ரூ. 10 லட்சம் நிதி!

தமிழகத்தில் நிலவி வரும் கொரோனா சூழலால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக பொது மக்கள் தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த வகையில், பல பொது மக்களும், அரசியல் தலைவர்களும் திரைப்பிரபலங்களும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், திரு. கே. பால கிருஷ்ணன் முதல்வரை நேரில் சந்தித்து, கொரோனாவுக்கான முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சத்தை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *