ஆந்திராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு கடந்த மே 3-ம் தேதி முதல் மே 17-ம் தேதி வரை பகுதி நேர ஊரடங்கிற்கு உத்தரவிட்டது.
அதன்படி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை கடைகள் உணவகங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டன. இன்று இந்த பகுதி நேர ஊரடங்கு முடிவுக்கு வர இருந்தது.
இந்நிலையில் இந்த ஊரடங்கினை வருகிற மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திராவில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.
இதன் காரணமாகவே ஊரடங்கு இந்த மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.