கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்! டவ்-தே புயல்

அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது டவ்-தே புயலாக வலு பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் டவ்-தே புயல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவின் கடற்கரையோரங்களில் உள்ள 8 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 

மேலும், இந்த புயல் மிகக்கடுமையான சூறாவளியாக மாறி மணிக்கும் 150 – 160 கி.மீ வேகத்துக்கு காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால், மீனவர்கள் மே 17 ஆம் தேதி வரி கடலுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டவ்-தே புயல் காரணமாக தமிழ்நாடு, கேரளா, கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் பல மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொறியியல் கலந்தாய்வு ! 26ல் ரேங்க் லிஸ்ட் ரிலீஸ் ! பிஇ, பிடெக் படிக்க 2.24 லட்சம் பேர் விண்ணப்பம்..

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி இளநிலைப் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம்…