மே 31 வரை அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தம்!

தமிழகத்தில், கொரோனாவின் தினசரி பாதிப்பு விகிதம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இதனைத் தடுக்க தற்போது ஊரங்கு விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்புகள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சின்னத்திரை நடிகை மற்றும் நடிகர்கள் என மொத்தம் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மே 31 ஆம் தேதி வரை சின்னத்திரை, திரைப்படம் என அனைத்துவிதமான படப்பிடிப்புகளும் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.