நேரு உள்விளையாட்டரங்கில் ரெம்டெசிவர் விற்பனை

கொரோனா நோயாளிகக்கு ரெம்டெசிவர் மருந்து அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் இந்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவியது. அரசு சார்பில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் ரெம்டெசிவர் மருத்துகள் விற்பனை செய்யப்பட்டது.
இதனை வாங்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் குவிந்தனர். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால் நோய் தொற்று பரவும் அபாயம் இருந்தது.
கூட்டநெரிசலைக் குறைப்பதற்காக சேலம், திருச்சி, மதுரை ஆகிய மாநிலங்களிலும் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கூட்டம் குறையவில்லை.
இதனைத்தொடர்ந்து, நேரு உள் விளையாட்டரங்கில் இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை தொடங்கியுள்ளது. மருந்துகளை வாங்க அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.