அமலாக்கப்படுமா புதிய கல்விக்கொள்கை?

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வகுப்புகள் ஆன்லைனில் நடந்து வருகிறது. இதனால், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்மை இந்த ஆண்டு அமலாக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மே 17 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா சூழல் குறித்தும் மாணவர்களின் கல்வி குறித்து எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.