திரைப்பட தொழிலாளர்களுக்கு அஜித் ரூ. 10 லட்சம் நிதி!
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இதனைத் தடுப்பதற்காக அரசு ஊரடங்கு போன்ற பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றில் வருகிறது.
கோயில் திருவிழாக்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகள் செயல்பட அனுமதியில்லை. இதனால், பல திரைப்பட தொழிலாளர்கள் வேலையிழந்து கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களுக்கு உதவுவதற்காக ஃபெப்சி யூனியனுக்கு நடிகர் அஜித் ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக அதன் தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார். மேலும், இந்த கடினமான காலத்தில் வேலை இழந்து நிற்கும் தொழிலாளர்களுக்காக பெரிய நடிகர்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என ஆர்.கே. செல்வமணி வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.