தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருவதால் மே 10 முதல் மே 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில் இன்று தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி வருகிற மே 17 முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம், மருத்துவ சிகிச்சை, இறப்பு போன்றவற்றிற்கு செல்வதற்கும் இ-பாஸ் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவதற்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய உத்தரவில் நாளை முதல் தேநீர் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கனவே கூறியது போல முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களை விநியோகிக்க காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறி, பூ , பழம் விற்பனை செய்யும் நடைபாதை வியாபாரிகளுக்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காய்கறி மளிகை கடைகள், இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும் 50 சதவீத பேருக்கு மட்டுமே கடைகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய அனைத்து புதிய கட்டுப்பாடுகளும் வருகிற மே 24-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *