காலியாகும் மநீம கூடாரம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கி போட்டியிட்டார். அரசியல் களத்தில் மநீம கட்சி மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஒரு தொகுதியில் கூட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், கட்சியில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் பலரும் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.

அந்த வகையில், மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்ட மநீம வேட்பாளர் பத்மபிரியாவும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால், மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *