இரண்டு மாதமாவது ஊரடங்கு அவசியம்! மறுபடியும் முதல்ல இருந்தா!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் வேகம் அதிகரித்து வருகிறது. தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், 18 மாவட்டங்களில் தொற்று பரவலின் வேகம் குறைந்துள்ள என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத் தலைவர், இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு இரண்டும் மாதங்களாவது முழு ஊரடங்கு அவசியம் என கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள 700க்கும் அதிமான மாவட்டங்களில் 500க்கும் அதிகமான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10% க்கும் அதிகமாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். இதனால் குறைந்தது 6 முதல் 8 வார காலமாவது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மட்டுமே கொரோனா தாக்கத்தை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *