மக்களுக்குப் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு…. விவரம் உள்ளே!
கொரோனா காலத்தில் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அதில் மிக முக்கியமான ஒன்று ஆம்புலன்ஸ் சேவை.
அத்தகைய ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு மையத்தில் மக்களுக்காக பணியாற்ற விரும்புவோருக்கு தகுந்த ஊதியத்துடன் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் 108 அவசரகால ஆம்புலன்ஸ் தலைமை அலுவலகத்தில் பணியாற்ற 100 பேர் தேவை என சென்னை தேனாம்பேட்டை மைய கட்டுப்பாட்டு அறையில் பணியாற்ற பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியின் அடிப்படையில் சிறப்பான ஊதியம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மக்களுக்கான இந்த சேவையை செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் பின்வரும் எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
9840365462
7397724714
7550052551