அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா!

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்தை அறிவித்தார். இதனையடுத்து, பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொறுத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ’நிர்பயா’ திட்டத்தின் கீழ் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொறுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், பேருந்து வழித்தடங்களை மக்கள் அறிந்துகொள்ள சலோ ஆப்பை விரைந்து செயல்படுத்தவும் அமைச்சர் ஆணையிட்டுள்ளார். பெண்கள் கட்டணமின்றி செல்லக்கூடிய வகையில் நகர பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.