சென்னையில் அதிகரிக்கும் உயிர்பலி! காத்திருப்பிலேயே போகும் உயிர்கள்

இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தினசரி தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால், மருத்துமனைகளில் படுக்கை வசதி கிடைக்காமல் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். பலர் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி கிடைக்காமல் பல நோயாளிகள் ஆம்புலன்சிலேயே காத்திருக்கும் நிலை உள்ளது. இன்று 4 பேர் படுக்கை கிடைக்காமல் இறந்துள்ளதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மருத்துவமனக்கு நேரில் சென்று மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.