மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை! ஸ்டாலின் அதிரடி

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவர்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது.

தங்கள் உயிரை துச்சமென மதித்து மக்களுக்கு சேவை செய்து வரும் மருத்துவர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

அந்தவகையில், ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ரூ.30,000, செவிலியர்களுக்கு ரூ.20,000, இதர பணியாளர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா சிகிச்சை பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு தலா ரூ.20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *