மதிமுக சார்பில் ரூ. 10 லட்சம் கொரோனா நிவாரண நிதி

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக கொரோனாவிற்காக நிவாரண நிதி வழங்குமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனால், பொது மக்கள் பலரும் தங்களால் முடிந்த பணத்தை நிவாரணமாக வழங்கி வருகின்றனர். இந்நிலியில், மதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ரூ.10 லட்சத்திற்கான காசோலையை நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனிடம் அரியலூர் எம்எல்ஏ சின்னம்மா வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *