இந்தியாவில் சற்றே குறைந்து வரும் பாதிப்பு!

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநிலங்களில் நிலவும் கொரோனா பரவலுக்கு ஏற்ப தனித்தனியாக பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதனையடுத்து, தினசரி பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்கள், அம்மாநில அரசு ஊரடங்கை விதித்து வருகிறது. தமிழ்நாட்டிலும், மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடுமையான ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக இந்தியாவின் 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதித்து 2 நாட்களே முடித்துள்ளதால் வரும் நாட்களில் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.