அதிமுக முன்னாள் எல்.எல்.ஏ கொரோனாவால் பலி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசியல்வாதிகள் அதிகம் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர்.
அந்த வகையில், லத்தூர் ஒன்றிய கழகச் செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.எஸ்.ராஜி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துள்ளார். அவரது மறைவுக்கு அதிமுக தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.