12 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாது – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 12 ஆம் வகுப்பைத் தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு12 ஆம் வகுப்பு தேர்வுகள் மட்டும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் கொரோனா பரவலின் தாக்கம் குறையாத நிலையில் தேர்வுகள் ரத்து செய்யபடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுமே அன்றி ரத்து செய்யப்படாது. அதே சமயத்தில் கொரோனா எப்போது குறையும் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்களோ அப்போது தான் தேர்வுகள் நடத்தப்ப்டும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *