எதிர்கட்சித் தலைவர் யார்? இன்று முடிவு வெளியாகுமா?
தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, முதல் சட்டசபைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில், தமிழக அதிமுக தான் எதிர்கட்சியாக உள்ளது. ஆனால், எதிர்கட்சித் தலைவர் யார் என இன்னும் முடிவு தெரியவில்லை. இதற்கு முன்பு நடந்த எம்.எல். ஏக்கள் கூட்டத்திலும் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இடையே கடுமையான போட்டி நிலவியதால் முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், இன்று மீண்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில் கட்சிக்கு ஒரே தலைமை வேண்டும் என்று ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூச்சலிட்டு வருகின்றனர்.