ஞாயிறு செய்திகள்
1. திங்கள் முதல் முழு முடக்கம்!
திங்கட்கிழமை முதல் முழு முடக்கம் அமலுக்கு வருவதால் மக்கள் இரு சக்கர வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
2.ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி வீரர் உயிரிழப்பு!
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி வீரர் எம்கே கௌசிக் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார்.
3. இந்தியாவில் ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரானா!
கடந்த (சனிக்கிழமை) 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 4,03,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்த சோகம்.
4.வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக புறப்பட்டு விட்டதாக ராஜஸ்தான் அணி தகவல்!
கொரோனா பாதிப்பினால் ஐபிஎல் காலவரையின்றி நிறுத்தப்பட்டது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
5.கொரோனாப் பரவலின் காரணத்தால் கீழடி அகழாய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
6.மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா உயிரிழப்பு!
முன்களப் பணியில் ஈடுபட்டிருந்த போது நேர்ந்த சோகம்
7. கர்ப்பிணிகளை முன் களப்பணியில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் – டிடிவி தினகரன் வேண்டுகோள்
மதுரை பெண் மருத்துவர் இறப்புக்குப்பின் இந்த வேண்டுகோளை அவர் முன்வைத்துள்ளார்.
8.தமிழகத்துக்கு நேரடியாக கோவாக்சின் வழங்கப்படும்!
தமிழகத்துக்கு நேரடியாக கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
9.கொரோனாவை எதிர் கொள்ள எதிர்ப்பு சக்தி அவசியம்!
கடலுக்கடியில் 50 அடி ஆழத்தில் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு.
10.விழுப்புரம் சாலையோரத்தில் கிடந்த பெண் குழந்தை மீட்பு!
11.டாஸ்மாக்கில் சனிக்கிழமை மட்டும் 426 கோடிக்கு மது விற்பனை!
ஊரடங்கில் மதுக்கடைகள் மூடப்படுவதையடுத்து கடைகளில் குவிந்த மதுப் பிரியர்கள்.
12.தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் – மு.க.ஸ்டாலின்
தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்குவேன் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
13. முதல் அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்தது!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் ஞாயிறன்று நடந்து முடிந்துள்ளது.
14. அன்னையர் தினம்!
அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
15.சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப்சிங் பேடி நியமனம்!
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக ககன்தீப் சிங் பேடி இன்று நியமிக்கப்பட்டார்.