15 ஆம் தேதி முதல் கொரோனா நிவாரணம்

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கொரோனா நிவாரண நிதியான 4000 ரூபாயில் முதல் தவணையாக 2000 ரூபாயை உடனடியாக வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.

அதன்படி, இன்று முதல் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

டோக்கன் வழங்கும் பணிகள் அனைத்தும் முடிந்ததும் வரும் 15 ஆம் தேதி முதல் மக்களுக்கு பணம் கொடுக்கும் பணிகள் தொடங்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டியளித்துள்ளார்.

மேலும், ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் காலை 8 மணி முதல் 12 மணி வரை நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *