புதுச்சேரி முதல்வருக்கு கொரோனா!
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார்.
அவருக்கு இரண்டு நாட்களாக கடுமையான வயிற்றுக் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா பாதிப்பு அறிகுறியாக இருக்கலாம் என நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தொற்று பாதிப்பு உறுதியானது.
இதனையடுத்து, அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.