எதிர்கட்சித் தலைவராகிறார் எடப்பாடி!
தமிழகத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக பொறுப்பேற்றது. அதிமுக எதிர்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
ஆனால், எதிர்கட்சித்தலைவர் யார் என்ற குழப்பம் தற்போது அதிமுகவில் நீடித்து வருகிறது. கடந்த வெள்ளிக் கிழமை நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தலைவர் யார் என முடிவு செய்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், வெளியாக வில்லை.
இதனையடுத்து, இன்று காலை முதல் மீண்டும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. மூன்று மணி நேரமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், இதனை ஏற்காமல் ஓ.பி.எஸ் கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.