12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது?

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகமாக இருந்த காலத்தில், முன் ஜாக்கிரதையாக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 12 ஆம் வகுப்பைத் தவிர அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு, மே 3 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்போதும் கொரோனாவின் தாக்கம் குறையாததால் தேர்வுகள் இன்னும் நடத்தப்பட்வில்லை.

இந்நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று காலை ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *